Published : 10 Feb 2023 04:44 AM
Last Updated : 10 Feb 2023 04:44 AM
சென்னை: தேசத்தின் பாதுகாப்புத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்கள் அறிய செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர்நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன. இந்த இணைய வழி தொடர் நிகழ்வின் 9, 10-ம் பகுதிகள் வரும் பிப்ரவரி 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ளன.
நாளை (பிப். 11-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டிஐஜி எம்.தினகரன், ‘சிறப்புப் பாதுகாப்பு குழு(SPG) மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர் படை (NSG)ஆகியவற்றில் உள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
பிப். 12-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஓய்வுபெற்ற கமாண்டன்ட் டி.மணி, ‘எல்லைப் பாதுகாப்புப் படையிலுள்ள (BSF) வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்.
இந்த இரு நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடவுள்ளார்.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP05 என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு 9944029700 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT