Published : 07 Feb 2023 04:33 AM
Last Updated : 07 Feb 2023 04:33 AM
சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டதேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நடத்தியது. இந்நிகழ்வை சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்து வழங்கின.
இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 7 மற்றும் 8-ம் பகுதிகள் கடந்த சனி, ஞாயிறு (பிப். 4, 5)ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் துறைசார்ந்த சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்றனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஓய்வுபெற்ற கமாண்டன்ட் டி.வின்சென்ட் தாமஸ், ‘மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் பேசியதாவது:
மத்திய ரிசர்வ் போலீஸ் படைநாடு முழுக்க மிகவும் அத்தியாவசியமான பங்களிப்பை ஆற்றி வருகிறது. இப்படையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குமான பணி வாய்ப்புகளும் உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படிப்போடு, நல்ல உடல் தகுதியும் இருப்பவர்கள் இப்படையில் சேர்ந்து சிறப்பான பங்களிப்பை ஆற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபியும் எழுத்தாளருமான ஜி.திலகவதி, ‘ஐபிஎஸ்., மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசியபுலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றிலுள்ள வேலைவாய்ப்பு’ எனும் தலைப்பில் பேசியதாவது:
காவல்துறை பணிகளில் மிகவும்பெருமைக்குரிய பணியாக புலனாய்வுத் துறை பார்க்கப்படுகிறது.தேசிய புலனாய்வு முகமையானது (என்ஐஏ), நாட்டின் சில பகுதிகளில் நடக்கும் நக்சலைட் தீவிரவாத செயல்பாடுகளை அதிரடியாகக் களமிறங்கி முறியடிப்பதோடு, முன்கூட்டியே தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் பணிகளையும் செய்து வருகிறது. கடின உழைப்போடு மனத் துணிவும் நேர்மையும் இருந்தால் புலனாய்வுத் துறையில் சிறப்பாக செயலாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வுகளை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடியபோது கூறியதாவது:
இந்திய துணை ராணுவப்படை பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு, நம் நாட்டின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காக்கும்பெரும்பணியைச் செய்து வரு கிறது. அதேபோல், நாட்டில் சட்டம்ஒழுங்கு சிறப்பாகப் பேணப்படவும், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீவிரவாத செயல்களை தடுப்பதிலும் சிபிஐ, என்ஐஏ-வின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த 2 நாள் நிகழ்வுகளையும் தவற விட்டவர்கள், https://www.htamil.org/Session7, https://www.htamil.org/Session8 என்ற லிங்க்-குகளில் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment