Published : 18 Jan 2023 04:20 AM
Last Updated : 18 Jan 2023 04:20 AM

ராமநாதபுரத்தில் ஜன.20-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

பிரதிநிதித்துவப் படம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்ப முள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலை நாடுநர்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.

இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணி யிடங்களுக்கு அரசு விதி முறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநர்களுக்கு கட்டணமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனி யார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப் படுகிறது. இந்த இணையதளத்தில் பதிவுசெய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x