Published : 05 Jan 2023 04:22 AM
Last Updated : 05 Jan 2023 04:22 AM
சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனமும் இணைந்திருக்கிறது.
இந்த இணையவழி தொடர் நிகழ்வின் முதல் இரு பகுதிகள் ஜன.7, 8-ல் நடைபெறவுள்ளன. இதில் துறை சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி கலந்துரையாடவுள்ளனர்.
ஜன.7-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கர்னல் செல்வகுமார், ‘இந்திய ராணுவத்திலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். 8-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் இந்திய வருவாய்த் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி சாய்கிருஷ்ணா, ‘இன்டலிஜென்ஸ் பீரோ (IB), ரிசர்ச் அனாலிஸ் விங்க் (RAW), நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் (NTRO )உள்ளிட்ட இந்திய உளவு நிறுவனங்களிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்த இரு நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP01 என்ற லிங்க்கில் பதிவுசெய்ய வேண்டும். முதலில் பதிவுசெய்யும் 10 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘போர்முனை முதல் தெருவரை’ நூல் பரிசாக வழங்கப்படும்.
மேலும் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய அறிவியல் நூல்களை சிறப்பு தள்ளுபடி விலையில் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT