Published : 18 Nov 2022 05:26 AM
Last Updated : 18 Nov 2022 05:26 AM
சென்னை: துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள 24,369 காவலர்(கான்ஸ்டபிள்) காலிப் பணியிடங்களுக்கு நவ.30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பணியாளர் தேர்வாணையம், துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள24,369 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 கி.மீ. தொலைவை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் என்றுஅந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும்.
மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு மற்றும்மருத்துவ தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டுஜனவரியில் நடைபெறும். முதல்கட்ட எழுத்துத் தேர்வு, தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை,சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி, புதுச்சேரியில் நடைபெறும் என மத்தியப் பணியாளர்தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT