Published : 15 Nov 2022 07:15 AM
Last Updated : 15 Nov 2022 07:15 AM
சென்னை: மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் அதிகளவில் முன்வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு ஏதுவாக கோடைக்கால உள்ளகப் பயிற்சியை சென்னை ஐஐடி ஆஃப்லைன் முறையில் நடத்தியது. இதன் மூலம் தொழில்துறையினரையும், மாணவர்களையும் நேரடியாக இந்த பயிற்சியில் இணைத்து, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி மூலம் நடப்பு கல்வியாண்டில் 333 மாணவர்களுக்கு முன் வேலை வாய்ப்புகள் (pre-placement offers) கிடைத்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. மேலும், முதல்கட்ட வளாக வேலைவாய்ப்பு முகாமை டிசம்பர்1-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளதால், அதுவரை முன் வேலைவாய்ப்புக்கான பணிகள் தொடர்ந்துநடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி ஆலோசகர்(வேலைவாய்ப்பு) பேராசிரியர் சத்யன் கூறியதாவது: மாணவர்களுக்கு உள்ளக பயிற்சியை அளித்து அவர்களின் திறனை மதிப்பிடும் வகையில் நீண்டகால நேர்காணல் நடைமுறையை மேற்கொள்ளவும், முன் வேலைவாய்ப்புகளை வழங்கவும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம். மாணவர்கள் நிறுவனங்கள் அளிக்கும் முன் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்ளும் போது, அந்த நிறுவனத்துடன் நீண்ட காலத்துக்கு நல்லதொரு தொடர்பு ஏற்பட வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT