Published : 16 Jun 2022 09:00 AM
Last Updated : 16 Jun 2022 09:00 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விருப்பம் உள்ள 17 முதல் 21 வயது வரைஉள்ள இளைஞர்களை (ஆண்கள்மட்டும்) கண்டறிய இந்திய விமானப்படை ஆட்தேர்வு மையம் முடிவு செய்துள்ளது.
இந்த பணியில் சேருவதற்கான கல்வித்தகுதி பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஆகும். பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விமானப்படையில் சேர விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதிக அளவில் இளைஞர்கள் தெரிவிக்கும் இடத்தில் வைத்து விமானப்படைக்கான ஏர்மேன் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனால் இளைஞர்களின் விருப்பத்தை கண்டறிய இந்திய விமானப்படையால் ஒரு கூகுள் லிங்க் உருவாக்கப்பட்டு அதில் ஒரு படிவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த படிவம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே ஏர்மேன் பணியில் சேர விரும்பும் கல்லூரி மாணவர்கள், கல்லூரிகளுக்கு அனுப்பப்படவுள்ள கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்துக்கு நேரில் வந்தும் கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
மேலும் 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூகுள் லிங்கை பெற்று அதில் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT