Published : 20 May 2022 07:38 PM
Last Updated : 20 May 2022 07:38 PM

மத்திய அரசின் 2065 பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கு, பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆள் சேர்ப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் காலியாக உள்ள 2065 பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் ஆள் சேர்ப்பு நடத்தவுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான தகுதி, விதிமுறைகள், விண்ணப்பம் ஆகியவற்றை தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணைய தளத்திலும் தென் மண்டல அலுவலகத்தின் sscsr.gov.in என்ற இணைய தளத்திலும் காணலாம்.

பணியாளர் தேர்வாணையத்தின் சென்னையில் உள்ள தென் மண்டலத்தில் 31 வகைமைகளின் 318 பணியிடங்களை நிரப்புவதற்கான விவரங்கள் மேற்குறித்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளன.

இதில் 7 வகைமைகள் பட்டப்படிப்பு நிலையையும் 16 வகைமைகள் மேல்நிலைப்பள்ளி நிலையையும் 8 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையையும் கொண்டவை.

மகளிர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் படியான இட ஒதுக்கீடும் உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வழியாக ஜூன் மாதம் 13 ம் தேதிக்குள் (இரவு 11.00 மணி வரை) ஆணையத்தின் ssc.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு தோராயமாக 2022 ஆகஸ்ட் மாதம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x