Published : 05 Apr 2022 07:49 AM
Last Updated : 05 Apr 2022 07:49 AM
சென்னை: நர்சிங் படித்தவர்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளில் மாதம் ரூ.2.5 லட்சம் வரையிலான சம்பளத்தில் வேலை கிடைக்க தமிழக அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரூ.2 லட்சம் சம்பளம்
இங்கிலாந்து நாட்டில் உள்ளமருத்துவமனைகளில் செவிலியர் வேலைக்கு ஆண்களும், பெண்களும் தேவைப்படுகின்றனர். இதற்கு நர்சிங் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டம் மற்றும், ஐிஇஎல்டிஎஸ், ஓஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாத பணி அனுபவம் அவசியம். மாத சம்பளம் ரூ.2 லட்சம் பெறலாம்.
இதேபோல, ஜெர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் நர்ஸாக பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றனர். நர்சிங் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏ-1, ஏ-2, பி-2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம்வேண்டும். மாத சம்பளம் தோராயமாக ரூ.1.5 லட்சம் வழங்கப்படும். பி-2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்றவர்கள் நர்ஸாக பணியமர்த்தப்பட்டு அவர்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.
தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omcresume@gmail.com என்றமின்னஞ்சலுக்கு ஏப்.5-க்குள் (இன்று) அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை www.omcman power.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT