Published : 27 Dec 2021 03:49 PM
Last Updated : 27 Dec 2021 03:49 PM

பாதுகாப்பு துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: ஆவடி ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தகவல்

மதுரை: நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு 75 வாரங்களை சுதந்திர தின அமுத விழா என அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு துறையில் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை நாட் டின் அனைத்து பகுதிகளிலும் சேர்க்கும் வகையில் விழா கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஆவடி ராணுவ ஆராய்ச்சி, அபிவிருத்தி அமைப்பும் (DRDO), சென்னை ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (CVRDE) ஆகியவை இணைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய நகரங்கள், கல்வி நிறுவனங்களில் ராணுவ ஆராய்ச்சி குறித்த சிறப்புக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் "இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பங்கும், அதன் பாதுகாப்பு தொழில்நுட்பங்களும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆவடி போர் வாகன ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவன முதன்மை தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் கிருஷ்ணகுமார் பங்கேற்று பேசியதாவது: பாதுகாப்புத்துறை ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ராணுவ உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

பொறியியல் மாணவர் கள் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் தேவைப்படு கின்றனர். ஆராய்ச்சி தொழில்நுட்ப பிரிவுகளில் அவர்களின் பங்களிப்பு தேவை.

இதற்காக ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆவடி ராணுவ ஆராய்ச்சி , அபிவிருத்தி மைய தேர்வில் வெற்றிபெற்றும் பணியில் சேரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலான கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என செயல்விளக்கம் காட்டப்பட்டது.

வேலம்மாள் குழும துணைத் தலைவர் கணேஷ் நடராஜன், முதல்வர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பு குழு செயலாளர் கவிதா காந்திமதி பங்கேற்றனர். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் கலந்து கொண் டனர்.

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பொறியியல் மாணவர்கள் ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் தேவைப்படுகின்றனர். ஆராய்ச்சி பிரிவுகளில் அவர்களின் பங்களிப்பு தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x