Published : 27 Jan 2021 06:21 PM
Last Updated : 27 Jan 2021 06:21 PM
இங்கிலாந்து அரசு மருத்துவமனையில் ரூ.2.5 லட்சம் சம்பளத்தில் செவிலியர் பணிக்கு ஆண்/பெண் தேவை. விருப்பம், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்தியப் பணியாளர்களைக் குறிப்பாக தமிழகப் பணியாளர்களை 1978-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.
தற்போது இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் (National Health Services) பணிபுரிய குறைந்தபட்ச 6 மாத அனுபவம் உள்ள டிப்ளமோ, பி.எஸ்.சி (Diploma, B.Sc Degree) பயின்ற (ஆண் மற்றும் பெண்) செவிலியர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். மேற்காணும் பணிக்கு IELTS (International English Language Testing System) (Band 7.0) அல்லது OET (Occupational English Test) (Grade-B) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு ரூ.2,00,000/- முதல் ரூ.2,50,000/-வரை மாதச் சம்பளம், இலவச விசா, விமான டிக்கெட் மற்றும் இங்கிலாந்து நாட்டின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
எனவே IELTS/OET பயிற்சி நிறுவனங்கள் மூலமாகப் பெறப்படும் IELTS/OET தேர்ச்சி பெற்ற செவிலியர்களைப் பெருமளவில் இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான விண்ணப்பம் மற்றும் விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் www.omcmanpower.com என்ற வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள IELTS/OET பயிற்சி நிறுவனங்கள், இந்நிறுவன வலைதளத்தில் அளிக்கப்பட்டுள்ள படிவங்களைப் பூர்த்தி செய்து பிப்ரவரி 12/2021-க்குள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42. ஆலந்தூர் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது”.
இவ்வாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT