Published : 24 Dec 2020 05:02 PM
Last Updated : 24 Dec 2020 05:02 PM
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத் துறையில் 2000 உதவி மத்தியப் புலனாய்வு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய உளவுத்துறை
காலியிடங்கள்: 2,000 (ஒதுக்கீடு அல்லாதோர்- 989, பொருளாதாரத்தில் பின்தங்கியோர்- 113, ஓபிசி- 417, எஸ்சி- 360 எஸ்டி- 121)
பணி: உதவி மத்தியப் புலனாய்வு அதிகாரி, கிரேடு II
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400 (சிறப்புப் பாதுகாப்பு ஊதியமும் உண்டு)
வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடக்கும். மொத்தம் 250 மதிப்பெண்கள். இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: உள்துறை அமைச்சகத்தின் https://www.mha.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.01.2021.
எஸ்பிஐ மூலம் பணம் செலுத்தக் கடைசித் தேதி: 12.01.2021.
கூடுதல் தகவல்களுக்கு: helpdesk.bharti@nic.in
தொலைபேசி எண்: 022-61087529
மேலும் விவரங்கள் அறிய: https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT