Published : 22 Dec 2020 01:48 PM
Last Updated : 22 Dec 2020 01:48 PM
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் பயிற்சித் தொகையோடு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும் என்று மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இது தொடர்பாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
’’திடநிலை இயற்பியல் ஆய்வகப் (SSPL) பணியில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஓராண்டு காலம் ரூ.8 ஆயிரம் தொகையோடு பயிற்சி வழங்கப்படும். 70 காலி இடங்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பிக்க முடியும்.
மின்னியல், மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல் டிப்ளமோ படிப்புகளை முடித்த விண்ணப்பதாரர்களும், எம்ஓபி (Diploma in Modern Office Practice) மற்றும் நூலக அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனினும் 2018 மற்றும் அதற்குப் பிறகு டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
டிசம்பர் 24ஆம் தேதி இதற்குக் கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 காரணமாக விண்ணப்பங்களையும் தேவையான ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு மெயில் அனுப்ப வேண்டும்’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/APPRENTICESHIP.pdf
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT