Published : 28 Aug 2019 10:52 AM
Last Updated : 28 Aug 2019 10:52 AM
தமிழக அரசின் கல்வியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 4-ம் தேதி முதல் காலிப் பணியிடங்களுக்கான வேலைக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். சுமார் 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 57
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அல்லது அதே பாடப்பிரிவில் பிஎச்டி பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
தேர்வு முறை:
1.கற்பித்தல் அனுபவம்
2.படிப்புத் தகுதி
3.நேர்முகத் தேர்வு
இந்தப் பணிகளுக்கு http://trb.tn.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600
மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு: ரூ.300
எப்படி பணம் செலுத்துவது: ஆன்லைன் பேங்கிங், க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைனில் மட்டுமே பணத்தைச் செலுத்தமுடியும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.09.2019
கூடுதல் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற இணைய முகவரியைக் க்ளிக் செய்து படிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT