Published : 03 Jan 2025 12:29 PM
Last Updated : 03 Jan 2025 12:29 PM
சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் வெல்டர், ஃபிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம் என்றும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டர், பைப்பிங் ஃபேப்ரிக்கேட்டர், பைப்பிங் ஃபிட்டர், ஸ்டரக்சர் ஃபேப்ரிக்கேட்டர் , ஸ்டரக்சர் ஃபிட்டர், மில்ரைட் ஃபிட்டர், கிரைண்டர்/ கேஸ் கட்டர் மற்றும் பைப்பிங் ஃபோர்மேன் ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவத்துடன் 44 வயதுக்கு உட்பட்ட வெல்டர் பணிக்கு ரூ. 40,000 முதல் ரூ. 78,000 வரை, பைப்பிங் ஃபேப்ரிக்கேட்டர் ரூ. 40,000 முதல் ரூ. 51,000 வரை பைப்பிங் ஃபிட்டர் ரூ. 36,000 முதல் ரூ. 42,000 வரை ஸ்டரக்சர் ஃபேப்ரிக்கேட்டர் ரூ. 42,000 முதல் ரூ. 51,000 வரை ஸ்டரக்சர் ஃபிட்டர் ரூ. 36,000 முதல் ரூ. 42,000 வரை மில்ரைட் ஃபிட்டர் ரூ. 42,000 முதல் ரூ. 51,000 வரை கிரைண்டர்/ கேஸ் கட்டர் ரூ. 30,000 முதல் ரூ. 32,000 வரை மற்றும் பைப்பிங் ஃபோர்மேன் ரூ.53,000 முதல் ரூ. 60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
மேலும் உணவு மற்றும் இருப்பிடம், வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண் 044-22502267 மற்றும் whatsapp எண் 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT