Published : 25 Oct 2024 05:41 PM
Last Updated : 25 Oct 2024 05:41 PM

சவுதி அரேபியாவில் நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு நிறுவனம் தகவல் 

சென்னை: வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெண் நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று (அக்.25) வெளியிட்ட செய்திக் குறிப்பு: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பெண் நர்சுகள் தேவைப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தட்சம் 2 ஆண்டுகள் பணிஅனுபவம் அவசியம். வயது 35-க்குள் இருக்க வேண்டும். சம்பளத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும்.

இதற்கான நேர்காணல் நவம்பர் 13 முதல் 15-ம் தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து கொண்டு தங்களின் சுயவிவர விண்ணப்பம், கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

பணிக்கு தேர்வுசெய்யப்படுவோரிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்தவொரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக இந்நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 95662 39685, 63791 79200 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x