Published : 10 Oct 2024 05:16 AM
Last Updated : 10 Oct 2024 05:16 AM

வேளாண்மை துறை அலுவலர் பணிக்கு தேர்வான 125 பேருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: வேளாண்மைத் துறையில் பணியாற்ற தேர்வான 125 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு 83 பேருக்கும் கருணை அடிப்படையில் 42 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்படி 125 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார். அப்போது வேளாண்மை துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் நா.முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, வேளாண்மை இயக்குநர் முருகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும் உழவர்நலத் துறையில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்பிடவும் அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இந்நாள் வரை வேளாண்மை – உழவர் நலத்துறையில் பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு 1,714 பேர் நியமிக்கப்பட்டனர். இதேபோல் பணிக்காலத்தில் இயற்கை எய்தியபணியாளர்களின் வாரிசுதாரர்கள் 223 பேர் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதன்படி 1,937 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலம் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வான 83 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கும், இதேபோல் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர்,ஆய்வக உதவியாளர், அலுவலகஉதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட 42 பேருக்கு ஆணை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கும் முதல்வர் நேற்று ஆணைகளை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x