Last Updated : 09 Oct, 2024 11:37 PM

 

Published : 09 Oct 2024 11:37 PM
Last Updated : 09 Oct 2024 11:37 PM

கோவையில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: அக்.14-ம் தேதி நடக்கிறது

கோவை: தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், கோவை மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 14-ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்டோபர் 14-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

முகாமில் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள தனியார்துறை நிறுவனங்களும் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட் தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்று பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இச்சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

தொழிற்பழகுநர் பயிற்சியின்போது உதவித்தொகை, தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்கள். அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மற்றும் எஸ்சிவிடி தேர்ச்சி பெற்றவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம் கோவை-29 என்ற முகவரியிலும் 9566531310, 9486447178 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x