Published : 29 Aug 2024 03:08 PM
Last Updated : 29 Aug 2024 03:08 PM

சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - தமிழக அரசு தகவல் 

சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் இன்று (ஆக.29) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளைகுடா நாடான சவுதி அரேபிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். மருத்துவ கல்வித் தகுதியுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 55-க்குள் இருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

பணிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு ஊதியத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும். ஊதியம், பணி விவரம் தொடர்பான கூடுதல் விவரங்களை 9566239685 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்தவொரு இடைத்தரகரோ ஏஜெண்டுகளோ கிடையாது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) நேரடியாக பதிவுசெய்து பயன்பெறலாம், என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x