Published : 18 Jul 2024 08:23 AM
Last Updated : 18 Jul 2024 08:23 AM

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள

கோப்புப்படம்

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2 நிலையில் காலியாகவுள்ள 507 இடங்களையும், அதேபோல் குரூப்-2ஏ நிலையில் காலியாகவுள்ள 1820 இடங்களையும் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜுன் 20-ம் தேதி அன்று வெளியிட்டது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு மெயின் தேர்வு குரூப்-2 பணிகளுக்கு தனியாகவும், அதேபோல், குரூப்-2 ஏ பணிகளுக்கு தனியாகவும் நடத்தப்பட இருக்கிறது. இதுவரை குரூப்-2 பணிகளுக்கு நேர்காணல் இருந்து வந்தது. தற்போது முதல்முறையாக குரூப்-2 ஏ பணிகளைப் போன்று குரூப்-2 பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x