Published : 16 May 2024 06:15 AM
Last Updated : 16 May 2024 06:15 AM

இந்தியாவில் செமி கண்டக்டர் படிப்பில் 1.2 பில்லியன் வேலைவாய்ப்புகள்: ஜெயபிரகாஷ் காந்தி தகவல்

பிளஸ்-2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி வேலூர் விஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: இந்தியாவில் செமி கண்டக்டர் படிப்பில் 1.2 பில்லியன் வேலை வாய்ப்புகள் உள்ளன என உயர் கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஜெய பிரகாஷ் காந்தி தெரிவித்தார். வேலூர் விஐடி அண்ணா அரங்கில் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. இதில், வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி யாக நடத்தப்பட்டது.

இதனை, வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் தொழில்சார் கனவுகளுக்கு தேவையான வாய்ப்புகளை வழங் குவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ‘நான் முதல்வன்’ எனும் ஒரு சிறப்பான திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.

பிளஸ்-2 முடித்து மேல் படிப்பு படிக்க மாணவர்களுக்கு தடையற்ற உயர்கல்வி வழங்கும் வகையில் வழிகாட்டுதல்களை வழங்க ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ எனும் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் வல்லுநர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூர்ந்து கவனித்து தங்களுடைய வாழ்க் கைக்கான அடித்தளத்தை அமைத் துக்கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே இவ்வுலகில் அழியாத செல்வம். கற்றவருக்கு மட்டுமே சென்ற இடமெல்லாம் சிறப்பு’’ என்றார்.

நிகழ்ச்சியில், உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஜெய பிரகாஷ் காந்தி பேசும்போது, ‘‘பொதுவாக உயர்கல்வி பாடப் பிரிவுகளை தேர்வு செய்யும்போது நாம் படித்த படிப்புக்கு எப்படிப்பட்ட வேலை கிடைக்கும், சம்பளம் எவ்வளவு, எந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கும், அந்த துறையில் எத்தனை ஆண்டுகள் நிலைத்திருக்க முடியும் என பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் உயர்கல்வி படிக்கும்போது உங்கள் உறவினர்கள், நண்பர்கள், யுடியூப் வழிகாட்டிகளின் ஆலோ சனைகளை கேட்காதீர்கள். 2024-ம் ஆண்டில் நீங்கள் சேர்ந்த படிப்பு 2028-ல் மாறியிருக்கும். நிறைய மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதற்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை.

அந்த துறை வரும் காலங்களில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்பதால் செயற்கை நுண்ணறிவை இணை பாடமாக தேர்வு செய்து படிக்கலாம். பொறியியல் துறைகளை பொருத்தவரை இந்தியாவில் செமி கண்டக்டர் துறையில் 1.2 பில்லியன் வேலைவாய்ப்புகள் உள்ளன.

இ.சி.இ., பாடப்பிரிவு வரும் காலங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. பொறி யியல் துறைகளை பொருத்தவரை பல்துறை கல்வியறிவு அவசியம். அதாவது, மெக்கானிக்கல் பாடப்பிரிவுடன் கணினி அறிவியல், மின்னியல் போன்ற பாடப் பிரிவுகளை சேர்த்து படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்காலத்தில் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறைக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

மருத்துவ துறையில் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு, அடுத்ததாக மீன்வளத்துறை படிப்பில் சேர்ந்தால் நல்ல எதிர் காலம் உள்ளது. மீன் உணவு நுகர்வு அதிகரித்து வருவதும் இதற்கு காரணமாக கூறலாம்.

இந்த கல்லூரிகளில் சேர தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு விண்ணப்பிக்கும்போது சேர்த்து விண்ணப் பிக்க வேண்டும். பாராமெடிக்கல் துறையில் செவிலியர் படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆப்தமாலஜி எனப்படும் கண் சிகிச்சை பிரிவில் படித்தால் நல்ல வருமானத்துடன் வேலைவாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் தாமதமான திருமணம் போன்றவற்றால் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுவதால் கருத்தரித்தல் மையங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இந்த துறைக்கு எதிர்காலம் இருப்பதால் எம்.எஸ்.சி., கிளீனிக்கல் எம்ப்பிரியாலஜி படிப்பை தேர்வு செய்யலாம். வணிகவியல் படிப்பவர்கள் பி.காம்., பி.பி.ஏ படிப்புடன் இன் வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், ப்ளாக் செயின், எக்ஸ்.எல்., பினான்சியல் ரிஸ்க் மேனேஜர் உள்ளிட்டவற்றை படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 550-க்கும் அதிகமான மதிப் பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுப லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா, துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) அதியமான், முத்துரங்கம் அரசு கல்லூரி முதல்வர் அ.மலர், உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற் றுள்ள ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணி மொழி, உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு அலுவலகம் காயத்ரி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x