Published : 15 Mar 2024 06:03 AM
Last Updated : 15 Mar 2024 06:03 AM
சென்னை: கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் இன்று அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ளஅனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரைநடைபெறுகிறது.
இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ,கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடையஅனைவரும் பங்கேற்கலாம் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் செலுத்ததேவை இல்லை.
முகாமில் பங்கேற்கும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழக தனியார் துறை வேலைவாய்ப்பு இணைய தளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யவேண்டும்.வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment