Published : 09 Mar 2024 06:07 AM
Last Updated : 09 Mar 2024 06:07 AM
சென்னை: பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ, வருவாய் கிராமங்களுக்கு 21 தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
மீன்வள அறிவியல் (Fisheries Science), கடல் உயிரியல் (Marine Biology), மற்றும் விலங்கியல் (Zoology) ஆகிய பிரிவுகளில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பிரிவுகளில் பட்டம் பெறாத பட்சத்தில் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), நுண்ணுயிரியல் (Microbiology), தாவரவியல் (Botany) மற்றும் உயிர் வேதியியல் (Biochemistry) ஆகிய பிரிவுகளில் ஏதேனும்ஒன்றில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இத்துடன் தகவல் தொழில்நுட்பம் (IT)தெரிந்தவர்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவராகவும், சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும்அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். கடந்த டிச.31-ம் தேதிப்படி வயது 35-க்குள் இருக்கவேண்டும், நன்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000 வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77, சூரியநாராயணா செட்டி தெரு, ராயபுரம், சென்னை 13 என்ற முகவரியில் விண்ணப்பத்தை பெற்று வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 93848 24245, 93848 24407 ஆகிய எண்களைஅணுகலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT