Published : 17 Nov 2023 08:01 PM
Last Updated : 17 Nov 2023 08:01 PM
கோவை: இந்திய பாதுகாப்பு படை பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டுதல் பெற நவம்பர் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விழி விழிப்புணர்வு அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக மாணவர்கள் முப்படையில் அதிகாரிகளாக வர வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, ‘நான் தலைவன்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பாதுகாப்பு படை தேர்வுகளுக்கு தயாராவதற்காக இலவசமாக புத்தகங்களும், வல்லுநர்களின் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். இவ்வாறு வழிகாட்டுதல்களை பெற பிளஸ் 2 முடித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் அனைத்து இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், கடைசி ஆண்டில் உள்ளவர்வர்கள், எஸ்எஸ்பி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய பாதுகாப்பு படைகள் மற்றும் துணைப்பாதுகாப்புப் படைகளில் அதிகாரி அந்தஸ்தில் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்வெழுதி வெற்றிபெற விரும்புவோர் www.vizhiawakeningtrust.org என்ற இணையதளத்தில் "Apply for Naan Thalaivan Thittam" என்ற லிங்க்-ல் வரும் கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்க, வரும் நவம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9884148257, 8015192734, 9659982071, 9444248257 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT