Published : 16 Nov 2023 05:35 AM
Last Updated : 16 Nov 2023 05:35 AM
சென்னை: 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் இளங்கலை, முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் நாட்டுக்கு சேவைபுரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியும் வகையிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக் கலையில் உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெபினார் தொடர் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்துள்ளது.
வரும் சனிக்கிழமை (நவ. 18) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெபினாரில், கோவை சமூக மருத்துவத் துறை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநர் டாக்டர் சுதா ராமலிங்கம், ‘மருத்துவத் துறை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெபினாரில், கான்பூர் ஐஐடி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் டிசைனிங் துறை பேராசிரியர் ஜெ.ராம்குமார் ‘இன்ஜினீயரிங் யுஜி அண்டு பிஜி: கல்வி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
இந்த இரு வெபினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து, ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கலந்துரையாட உள்ளார்.
நிகழ்வில் பங்கேற்க... இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/DKNP006 என்ற லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9500165460 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment