Published : 06 Oct 2023 08:20 PM
Last Updated : 06 Oct 2023 08:20 PM
கோவை: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு பொள்ளாச்சியில் வரும் 14-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வரும் 14-ம் தேதி காலை 8 மணி முதல் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், உற்பத்தித் துறை, ஜவுளித் துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டிதுறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 -க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.
எட்டாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இதில் பங்கு பெறலாம். இம்முகாமிற்கு வருவோர் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் வர வேண்டும். கலந்து கொள்ள வயதுவரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம். தேர்வுசெய்யப்படுவோருக்கு பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும்.
வேலைதேடுவோர் https://forms.gle/t6HNkNPwAvYSUXo46 என்ற லிங்க்-ல் விவரங்களைப் பதிவு செய்வது அவசியம். மேலும் விவரங்களுக்கு 9499055937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்பு கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், தனியார்துறை நிறுவனங்கள் https://forms.gle/nFx2YeJKCcDhVsNr6 என்ற லிங்க்-ல் விவரங்களை பதிவு செய்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு வேலையளிப்போர், 9790199681 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT