Published : 28 Sep 2023 04:07 AM
Last Updated : 28 Sep 2023 04:07 AM
சென்னை: நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து 10, 11,12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி இளங்கலை, முதுகலை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக்கலை ஆகிய உயர்கல்வி தொடர்பான மாணவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணையவழி வெப்பினார் நிகழ்ச்சி வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மாலை 4 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில்கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.
அந்த வகையில், வரும் செப்.30-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில், ‘இந்திய ஆட்சிப் பணியில் (IAS) வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் ஆர்.ஆனந்தகுமார், ஐஏஎஸ் உரையாற்ற உள்ளார்.
அக்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில் ‘இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் மத்திய அரசு இயக்குநர் மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன், ஐஎஃப்எஸ் உரையாற்ற உள்ளார்.
ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு இந்த 2 வெப்பினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து கலந்துரையாட உள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://www.htamil.org/DKNP002 என்ற லிங்க் மூலமாகவோ, அருகே உள்ள கியூஆர்கோடு மூலமாகவோ பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களை பெற 9500165460 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT