Published : 03 Aug 2023 07:06 AM
Last Updated : 03 Aug 2023 07:06 AM
சென்னை: மத்திய அரசின் இளநிலைப் பொறியாளர் பணி தேர்வுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) பதவியில் உள்ள 2,675 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபரில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத விரும்புபவர்கள் ssc.nic.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
21 நகரங்களில் தேர்வு மையம்: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஆக.17, 18-ம் தேதிகளில் அவகாசம் வழங்கப்படும். இந்த தேர்வுக்காக தமிழகத்தில் 7 உட்பட தென் மண்டலத்தில் 21நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது.
கல்வித் தகுதி: இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வுக் கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலை தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று எஸ்எஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT