Published : 24 Jun 2023 06:41 PM
Last Updated : 24 Jun 2023 06:41 PM

பகுதிநேர ஆசிரியராக விரும்பும் இல்லத்தரசிகளுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது ஷ்ரத்தா மானு அறக்கட்டளை

கோப்புப்படம்

சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச வகுப்புகளை நடத்தும் தன்னார்வ அமைப்பான ஷ்ரத்தா மானு அறக்கட்டளை, இல்லத்தரசிகள், பட்டதாரி பெண்களை பகுதிநேர ஆசிரியர்களாக மாற்றும் வகையில் இலவசப் பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஷ்ரத்தா மானு அறக்கட்டளை (Shraddha Maanu Foundation-SMF),பள்ளி குழந்தைகளுக்கான இலவச வகுப்புகளை நடத்தும் ஒரு தன்னரர்வ அமைப்பு ஆகும். இல்லத்தரசிகள், பட்டதாரி பெண்களை பகுதி நேர ஆசிரியர்களாக மாற்றும் வகையில், மல்டிபிள் இன்சடலிசென்ஸ் (Multiple Intelligences) பயிற்சிகனை வழங்கும் ‘உபாசனா ’ (Upasana) என்ற படிப்பை இந்த அறக்கட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இலவசப் பயிற்சி திட்டம் பட்டதாரி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பாடுபட்டு வருகிறது. SMF அமைப்பு, பட்டதாரி பெண்களுக்கு உபாசனா சான்றிதழ் பயிற்சிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பயிற்சியானது தொடக்கக் கல்வி கற்பிப்பதற்கு பன்முக திறன்மிக்கவர்களாக பட்டதாரி பெண்களை முன்னேற்றுவது ஆகும்.

'உபாசனா' - 6 மாத இலவச பயிற்சித் திட்டமாகும். இது பட்டதாரி பெண்களின் சூழலுக்கேற்ப ஆன்லைன் மூலமாக கற்க உதவும். மேலும் கற்பித்தலில் உள்ள பல்வேறு நவீன நுட்பங்களையும் இப்பயிற்சித் திட்டம் கற்றுத் தருகிறது. ஆசிரியராக விரும்பும் இல்லத்தரசிகளும், தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற விரும்புவோருக்கும் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நல்வாய்ப்பானது கற்பித்தலில் புதிய நடைமுறைகளைப் புரிந்துகொள்வதோடு, வெற்றிகரமாக பயிற்சியை முடித்த பிறகு அவர்கள் வருவாய் ஈட்டுவதற்கும் வழியேற்படுத்தும்.

பயிற்சியில் சேரும் பெண்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட கல்வி (கலாசாரம் மற்றும் வாழ்க்கைத் திறன்) ஆகியன பன்முக நவீன நுட்பங்கள் மூலம் பயிற்சி தரப்படும். இந்த பயிற்சித் திட்டமானது 150 மணி நேரம் ஆன்லைன் மற்றும் சிறு குழு அடிப்படையில் 3 மாதங்களுக்கு அளிக்கப்படும். இக்குழுவில் 20 முதல் 30 பேர் இடம்பெறுவர். இதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும். இதில் பங்கேற்பவர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் முன்னேறுவதற்கான வாய்ப்பையும் பெறுவர்.

இந்த சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பாடுபட விரும்பும் நூற்றுக் கணக்கான பெண்களின் லட்சியம் ஈடேறும். இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பெண்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாவது நிச்சயம். அடுத்த கட்ட பயிற்சி வகுப்புக்கான (10-வது batch) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள், 72007 00179 என்ற செல்போன் எண்ணிலும், https://shraddhamaanu.org/register-now-form.html என்ற இணைய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x