Published : 30 May 2023 11:01 AM
Last Updated : 30 May 2023 11:01 AM

மே 30, 2023 | தங்கம் விலையில் மாற்றமில்லை சவரன் ரூ.44,760 விற்பனை 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி இன்று (மே 30) சவரன் ரூ.44,760-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே 4-ம் தேதி சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது. இந்தநிலையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி இன்று (செவ்வாய்க்கிழமை) கிராம் ரூ.5,595-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.44,760-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,472-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,500 ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x