Published : 29 May 2023 10:18 AM
Last Updated : 29 May 2023 10:18 AM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 29) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,760-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே 4-ம் தேதி சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது. இந்தநிலையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,595-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,760-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,472-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,000 ஆக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT