Published : 16 May 2023 10:31 AM
Last Updated : 16 May 2023 10:31 AM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நான்காவது நாளாக எந்தவித மாற்றமுமின்றி அதே விலையில் தொடர்கிறது. இன்று (மே 16) ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் மே.3-ஆம் தேதி அதிரடியாக ரூ.728 உயர்ந்தது. தொடர்ந்து மறுநாள் சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முந்தைய விலையிலேயே விற்கப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) கிராம் ரூ.5,715-க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.45,720-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,472-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 0.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.78,800 ஆக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT