Published : 15 May 2023 07:12 PM
Last Updated : 15 May 2023 07:12 PM
புதுடெல்லி: 2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் -0.92% ஆக உள்ளது. இது 2023 மார்ச் மாதத்தில் 1.34%-ஆகப் பதிவானது.
ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் குறைவதற்கு உணவுப் பொருட்கள், ஜவுளி, உணவு அல்லாத பொருட்கள், இரசாயனப் பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம் மற்றும் காகிதப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததே காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை விலைக் குறியீட்டு எண் முந்தைய மாதத்துடன் ஒப்பீடு:
முதன்மைப் பொருட்கள்: இந்த முக்கிய அட்டவணையில் உள்ள பொருட்களின் மொத்த விற்பனை விலையின் குறியீட்டு எண் கடந்த மாதத்தை விட 1.31% அதிகரித்து 177.3 ஆக உள்ளது. இது 2023 மார்ச் மாதத்தில் 175.0-ஆக இருந்தது.
எரிபொருள் மற்றும் ஆற்றல்: இந்த அட்டவணையிலுள்ள பொருட்களின் குறியீட்டு எண் 2023 ஏப்ரல் மாதத்தில் 2.68% குறைந்து 152.6-ஆகப் (தற்காலிகமானது) பதிவானது. இது 2023 மார்ச் மாதத்தில் 156.8-ஆக இருந்தது.
உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள்: இந்த அட்டவணையிலுள்ள பொருட்களின் குறியீட்டு எண் 2023 ஏப்ரலில், 141.2-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏப்ரல் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம், இது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT