Published : 11 May 2023 10:34 AM
Last Updated : 11 May 2023 10:34 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வு

மும்பை: பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வடைந்து 61,966.73 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வடைந்து 62,084 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 18,343 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தில் நிலையில்லாத தன்மையை அடைந்தது. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வடைந்து 61,966.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10.60 புள்ளிகள் சரிந்து 18,304.50 ஆக இருந்தது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 4.9 சதவீதமாக குறைந்தது. இதனால் உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. இருந்தபோதிலும் வர்த்தகத்தின் போது ஏற்ற இறக்கத்தை சந்தித்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டிசிஎஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன. எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், ஐடிசி, டாடா ஸ்டீல் டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x