Published : 28 Apr 2023 07:02 AM
Last Updated : 28 Apr 2023 07:02 AM

திறமை, அதிர்ஷ்டம் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி நிர்ணயிக்க திட்டம்

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளை திறமை, அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளாக வகைப்படுத்தி ஜிஎஸ்டி யை நிர்ணயிக்க மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இப்போது அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை திறமை, அதிர்ஷ்டம் என்ற அடிப்படையில் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு 18% ஜிஎஸ்டியை தொடரவும் சூதாட்டம் உள்ளிட்டஅதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டுகளுக்கு 28% ஆக உயர்த்தவும் நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: திறன் மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்தபிரிவுகளில் ஆன்லைன் விளையாட்டுகளை வகைப்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் விளையாட்டு என்பது அதிர்ஷ்டம் சார்ந்ததாக இருக்கும்அல்லது திறமை சார்ந்ததாக இருக்கும். இவற்றின் அதிர்ஷ்டம்சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டிவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் இறுதி முடிவு: ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரியை நிர்ணயிப்பது குறித்து மே அல்லது ஜூன்மாதத்தில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போதைய நிலையில், திறமைக்கான மற்றும் அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டுகள் எது என்பதைவேறுபடுத்துவதே முக்கிய பணியாக உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த ஆண்டு டிசம்பரில்ஆன்லைன் விளையாட்டு குறித்தஜிஎஸ்டி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்ப்பித்தது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்கஅமைச்சர்கள் குழு ஒப்புக்கொண்டது.

இருப்பினும், நிறுவனத்தின் போர்ட்டல் மூலம் விதிக்கப்படும் கட்டணங்களுக்கு மட்டுமே விரி விதிக்கப்பட வேண்டுமா அல்லது பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்படும் பந்தயத் தொகை உட்பட முழு பரிவர்த்தனைக்கும் வரி விதிக்கப்பட வேண்டுமா என்பதில் ஒருமித்த கருத்து இல்லாத நிலையில் இறுதி முடிவெடுக்க அனைத்து பரிந்துரைகளையும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்ப அமைச்சர் குழு முடிவு செய்தது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டிவிதித்தால் அது பங்கேற்பாளர்களை சட்டவிரோத இணையதளங்களை நோக்கி உந்தித் தள்ளும் என சம்பந்தப்பட்ட துறைசார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x