Published : 12 Apr 2023 01:26 PM
Last Updated : 12 Apr 2023 01:26 PM
மும்பை: மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷப் மஹிந்திரா காலமானார். அவருக்கு வயது 99. அண்மையில் வெளியான ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அதிக வயதான கோடீஸ்வரர் என அறியப்பட்டவர். அவரது மொத்த சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள்.
1963 முதல் 2012 வரையில் சுமார் 50 ஆண்டு காலம் மஹிந்திரா குழும தலைவராக இயங்கியவர். 1947-ல் தனது தந்தையின் நிறுவனமான மஹிந்திராவில் அவர் இணைந்துள்ளார். தொடக்கத்தில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் கவனம் செலுத்தி வந்துள்ளார். மஹிந்திரா வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
டிராக்டர்கள் மட்டுமல்லாது ரியல் எஸ்டேட், மென்பொருள் சேவை என பல துறைகளில் அவரது தலைமையின் கீழ் தான் மஹிந்திரா குழுமம் முதலீடு செய்துள்ளது. செவாலியர் de l'Ordre National de la Légion d'honneur விருதை அவருக்கு பிரெஞ்சு அரசாங்கம் வழங்கியுள்ளது.
The industrial world has lost one of the tallest personalities today. Shri Keshub Mahindra had no match; the nicest person I had the privilege of knowing. I always looked forward to mtgs with him and inspired by how he connected business, economics and social matters. Om Shanti.
— Pawan K Goenka (@GoenkaPk) April 12, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT