Published : 04 Apr 2023 01:12 PM Last Updated : 04 Apr 2023 01:12 PM
IPL | பார்வையாளர்களின் அமோக வரவேற்பினால் வியூஸை அள்ளும் ஜியோ சினிமா
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனை டிஜிட்டல் வழியில் ஒளிபரப்பி வருகிறது ஜியோ சினிமா தளம். முதல் முறையாக இந்த தளம் ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. இருந்தும் பார்வையாளர்களின் அமோக வரவேற்பினால் முதல் வார இறுதியில் சுமார் 147 கோடி வீடியோ வியூஸ்களை பெற்றுள்ளது ஜியோ சினிமா. இது முந்தைய சீசனை காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ சினிமா தளத்தில் 4K ரெஸல்யூஷனில் நேரலையில் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. கடந்த 2022 ஜூன் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்புக்கான டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வயாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை இப்போது ஜியோ டிவி அல்லது ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும்.
தமிழ் உட்பட 12 மொழிகளில் ரசிகர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு 50 பிரேம் என்ற துல்லியத்தில் புள்ளி விவரங்களுடன் கூடிய ஹைப் மோட், மல்டி கேமரா ஆங்கிள் வியூ, சாட் செய்யும் வசதி போன்ற அம்சங்களுக்கும் இதில் இடம்பெற்றுள்ளது.
ரசிகர்கள் அமோக ஆதரவு!
ஜியோ சினிமாவை அனைத்து நிறுவன டெலிகாம் பயனர்களும் இலவசமாக பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜியோ டெலிகாம் பயனர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மட்டுமே இது இருந்தது.
முதல் வார இறுதியில் ஜியோ சினிமா செயலியை சுமார் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ சினிமா செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் சுமார் 100 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோட் செய்துள்ளனர்.
அதே போல முதல் வார இறுதியில் சுமார் 147 கோடி வீடியோ வியூஸ்களை பெற்றுள்ளது ஜியோ சினிமா. இது முந்தைய சீசனை காட்டிலும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஐபிஎல் சீசன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இது கடந்த சீசன்களை காட்டிலும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல இது ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடரை காட்டிலும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு போட்டிக்கு ஒரு பார்வையாளரின் சராசரி பார்வை நேரம் 57 நிமிடங்களைத் தொட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் வாரத்தில் முந்தைய சீசன்களை காட்டிலும் சுமார் 60 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 2.5 கோடி டவுன்லோடுகளை ஜியோ சினிமா செயலி எட்டியுள்ளது. சென்னை மற்றும் குஜராத் ஆடிய முதல் போட்டியை அதிகபட்சமாக 1.6 கோடி பேர் வரை பார்த்துள்ளனர்.
WRITE A COMMENT