Published : 23 Mar 2023 12:04 PM
Last Updated : 23 Mar 2023 12:04 PM

கவுதம் அதானிக்கு வாரந்தோறும் ரூ.3,000 கோடி இழப்பு

புதுடெல்லி

ஹூருன் சர்வதேச பணக்காரர் பட்டியல் 2023-ல் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது: அகமதாபாதைச் சேர்ந்த 60 வயதான கவுதம் அதானி ஒவ்வொரு வாரமும் ரூ.3,000 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவரது சொத்து மதிப்பு உச்ச நிலையிலிருந்து 60 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

அதானி நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதனால், உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி தற்போது 23வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கவுதம் அதானி 28 பில்லியன் டாலரை இழந்ததன் காரணமாக அவரது சொத்து மதிப்பு 53 பில்லியன் டாலராக குறைந்தது. இதையடுத்து, நடப்பாண்டில் அதிக இழப்பை சந்தித்த உலகின் மிகப்பெரிய பில்லியனர்கள் பட்டியலில் கவுதம் அதானி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • பிரபாகர்

    இவர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய இழப்பு அதை விட பெரியது.

 
x
News Hub
Icon