Published : 17 Mar 2023 05:26 AM
Last Updated : 17 Mar 2023 05:26 AM
சென்னை: ஆடை மற்றும் காலணிகளுக்கானபாகங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான கோட்ஸ், மதுரையில் நூற்பு (ஸ்பின்னிங்) மற்றும் முறுக்கு (டிவிஸ்டிங்) பணிகளுக்கான புதிய நவீன உற்பத்தி மையத்தை தொடங்கியுள்ளது.
10,000 சதுர அடியில், பல இழைகள் (மல்டிபிள் பைபர்), கலவைகள், அராமிட்ஸ் போன்ற உயர்செயல் திறன் கொண்ட இழைகளை கையாளுவதற்கான உள்கட்டமைப்பு வசதியுடன் இந்த புதிய ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க மற்றும் மறுசுழற்சிக்கான பொருட்களின் மாற்றத்தை துரிதப்படுத்த சீனாவின் ஷென்சென் நகரில் அமைந்துள்ள கோட்ஸ் நிலைத்தன்மை மையத்துடன் இணைந்து இந்த புதிய உற்பத்தி மையம் செயல்படும்.
ஆடைகள், காலணிகள் மற்றும் செயல்திறன் கொண்ட நிலையான தையல் நூல்களுக்கான புதிய தலைமுறைப் பொருட்களை உருவாக்கிடும் பணிகளில் இந்த இருமையங்களும் (மதுரை, ஷென்சென்) இணைந்து செயல்படும்.
பசுமை தொழில்நுட்பங்களுக்கான வளர்ச்சியை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 10 மில்லியன் டாலர் செலவிட கோட்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்த முதலீட்டின் ஒரு பகுதியாகவே இந்த புதிய ஆலை நவீன தொழில்நுட்பத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
கோட்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி ராஜீவ் சர்மா கூறுகையில். “ஸ்பின்னிங் மற்றும் ட்விஸ்டிங் உற்பத்தி பணிகளுக்கு கோட்ஸ் உருவாக்கியுள்ள சிறப்பான தனித்தன்மை வாய்ந்த மையம் இதுவாகும். கார்பன் உமிழ்வை முழுவதுமாக கட்டுப்படுத்தி பசுமையை நோக்கிய பயணத்தில் உறுதியாக உள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT