Published : 14 Mar 2023 10:32 AM
Last Updated : 14 Mar 2023 10:32 AM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 14) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.43,120 -க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைந்திருந்த தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து ரூ. 5,390-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120 -க்கு விற்பனையாகிறது. இதனால் 41,000 - 42,000 ஆயிரத்திற்குள் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக 43,000 தெட்டிருக்கிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,016-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.72.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.70,000-ஆக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT