Published : 10 Mar 2023 05:55 AM
Last Updated : 10 Mar 2023 05:55 AM
புதுடெல்லி: ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (ஆர்இஐடி) மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளில் (ஐஎன்விஐடி) ஸ்பான்சர்களுக்கான உயர் பொறுப்பு தொடர்பான விதிமுறை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கடந்த பிப்ரவரி 23-ல் செபி அழைப்பு விடுத்தது.
இதற்கான காலக்கெடு மார்ச் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், இதுகுறித்து மார்ச் 15-ம்தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என காலக்கடுவை நீட்டித்து செபி உத்தரவிட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட புதிய பரிந்துரை முன்மொழிவுகளின்படி இவ்விரு முதலீட்டு அறக்கட்டளைகளில் ஸ்பான்சர்கள் குறிப்பிட்ட சதவீத யூனிட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்பான்சர்கள் இல்லாததால் ஏற்படும் கட்டமைப்பு பாதிப்புகளை மனதில் கொண்டு இந்த மாற்றங்களை செபி முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT