Published : 01 Mar 2023 10:42 AM
Last Updated : 01 Mar 2023 10:42 AM

மார்ச் 1, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று புதன்கிழமை (மார்ச் 1) சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து, ரூ.5,235-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,776 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.70,200-ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x