Published : 22 Feb 2023 09:53 PM
Last Updated : 22 Feb 2023 09:53 PM

Zomato Everyday: ஜொமாட்டோவில் வீட்டு சாப்பாடு கிடைக்கும் புதிய அம்சம்

கோப்புப்படம்

குருகிராம்: ஜொமாட்டோ உணவு டெலிவரி செயலியில் ‘Zomato Everyday’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது 10 நிமிட உணவு டெலிவரிக்கு மாற்று என சொல்லப்படுகிறது. இதன் மூலம் வீட்டை விட்டு தொலைதூரத்தில் வசிப்பவர்கள் வீட்டு சாப்பாட்டை ருசிக்கலாம் என தெரிகிறது. இதில் சமையல் செய்பவர்களும் அசல் வீட்டு சமையல் கலைஞர்கள் என தகவல்.

இன்றைய டிஜிட்டல் உலகில் வசித்து வரும் சிலரது வீட்டில் சமைக்க டொமேட்டோ (தக்காளி) இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் பயன்படுத்தி வரும் போனில் ஜொமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவன செயலிகள் நிச்சயம் இருக்கும். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும்.

ஜொமாட்டோ தளத்தில் பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அம்சங்கள் அமலாகும். அந்த வகையில் இப்போது Zomato Everyday என்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.89 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இந்த அம்சம் ஹரியாணாவின் குருகிராம் நகரத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் நகரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே இது அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

எங்கள் பார்ட்னர்ஸ் வீட்டில் உள்ள சமையல் கலைஞர்கள் உடன் இணைந்து இதற்காக பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் பயனர்கள் சுவையான வீட்டு உணவை ருசிக்கலாம் என ஜொமாட்டோ தெரிவித்துள்ளது. நிச்சயம் இது உணவக உணவுகளை ருசித்து வரும் பயனர்களுக்கு வீட்டு சாப்பாடு சாப்பிட உதவும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x