Published : 10 Feb 2023 10:01 AM
Last Updated : 10 Feb 2023 10:01 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 218 புள்ளிகள் சரிவு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 95 புள்ளிகள் சரிந்து 60,711ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44 புள்ளிகள் சரிவடைந்து 17,849 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. காலை 09:34 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 216.86 புள்ளிகள் சரிவடைந்து 60,589.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.80 புள்ளிகள் உயர்வடைந்து 17,847.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் குழப்பான சூழல், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ஐடிசி, பங்குகள் உயர்வில் இருந்தன. ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x