Published : 07 Feb 2023 06:14 AM
Last Updated : 07 Feb 2023 06:14 AM
புதுடெல்லி: நாட்டிலுள்ள சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்து வசதியை வழங்க மத்திய அரசு 2017-ம் ஆண்டு ‘உடான்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடகிழக்கு மாநிலங்களுக்கு விஸ்தாரா விமான நிறுவனம் திட்டமிட்டபடி விமானங்களை இயக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, விதிகளை மீறியதாகக் கூறி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஸ்தாரா விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.70 லட்சம் அபராதம் விதித் துள்ளது.
இந்த அபராதத்தை விஸ்தாரா நிறுவனம் ஏற்கெனவே செலுத்தி விட்டது. இந்தத் தகவல் இப் போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விஸ்தாரா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “விமானப் போக்கு வரத்து இயக்குநரகத்தின் விதி முறைகளை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.
மேற்கு வங்கத்தின் பாக்தோக்ரா விமான நிலையம் மூடப்பட்டதால் வடகிழக்கு மாநிலங்களுக்கான சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதற்காக அபரா தம் விதிக்கப்பட்டது. விதிகளை மதித்து நடக்கும் எங்கள் நிறுவனம் அந்த அபராதத்தை செலுத்தி விட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT