Published : 31 Jan 2023 10:31 AM
Last Updated : 31 Jan 2023 10:31 AM
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிவடைந்து 59,229 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் சரிந்து 17,550 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதும் விரைவில் வீழ்ச்சியை நோக்கி சென்றன. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 250.78 புள்ளிகள் சரிவடைந்து 59,249.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.70 புள்ளிகள் சரிவடைந்து 17,578.25 ஆக இருந்தது
பிப்ரவரி 1 (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தநிலையில் நிதியமைச்சர் நிர்லா சீதாராமன் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்ய இருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதேபோல் வட்டி விகித உயர்வு குறித்த ரிசர்வ் வங்கியின் அறிக்கை நாளை மாலைக்குள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தலாம்.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்டஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, கோடாக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்டர்வ், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா பங்குகள் சரிவில் இருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT