Last Updated : 31 Jan, 2023 04:20 AM

 

Published : 31 Jan 2023 04:20 AM
Last Updated : 31 Jan 2023 04:20 AM

விவசாயிகள் - வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் இ-நாம் திட்டத்தை செயல்படுத்த வியாபாரிகள் மறுப்பு: காரணம் என்ன?

விழுப்புரம்: வியாபாரிகள் - விவசாயிகளை ஒன்றிணைக்கும் வகையிலான ‘இ -நாம்’ இணைய வழித் திட்டத்தில் பங்கேற்பதை வியாபாரிகள் மறுத்து வருகின்றனர். தங்கள் தயக்கத்திற்கு காரணமாக, தொழில்நுட்ப ரீதியிலான சில சிக்கல்களை முன்வைக்கின்றனர்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க, வேளாண் விளைபொருட்களை ‘ஆன்லைன்’ மூலம் விற்கும் புதிய முறையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்காக தேசிய வேளாண் சந்தை இணையதளம், ’இ நாம்’ (E. National agriculture market)என்ற பெயரில் 2016-ம் ஆண்டுபிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.

‘இந்த இணையதளத்தில் விவசாயிகளும், வியாபாரிகளும் இணைந்திருப்பார்கள். இந்த இணையதளம் மூலம், விவசாயிகள், தங்களின் விளைபொருட் களுக்கு எந்த இடத்தில் தேவையுள்ளது. இந்த தேவை எவ் வளவு நாட்களுக்கு நீடிக்கும் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளலாம். இதில் இடைதரகர்கள் கட்டுப்படுத்தப்படுவார் கள்’ என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

கட்டுப்படியான விலையைக் கொடுக்க தயாராக இருக்கும் வியாபாரி - விளை பொருட்களை விற்க முனையும் விவசாயி இருவரையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவதே இந்த ‘இ-நாம்’ திட்டத்தின் இலக்கு. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களி லும் ‘இ-நாம்’ முறை கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அதில், விளை பொருட்களுக்கு மதிப்பீடு செய்யும்வியாபாரிகள், விலை நிர்ணயம் செய்து, மொபைல் போன் மூலம்அதை அனுப்பி, ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

‘இ-நாம்’ திட்டத்தை செயல் படுத்த வியாபாரிகள் மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து ஏற் கெனவே நடைமுறையில் உள்ள சீட்டு முறையில் விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதுதொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது.

அண்மையில் இதுதொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் ஆட்சியர் மோகன் தலை மையில் வியாபாரிகளிடம் இது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கொள் முதல் செய்யும் வியாபாரிகள், “அரசு தரப்பில் ‘இ -நாம்’ திட்டத்தை கையாள எவ்வித பயிற்சியும் கொடுக்கவில்லை. மொபைல் மூலம் இதனை செயல்படுத்துவது சாத்தியமில்லை. முறையான பயிற்சி இல்லாமல் இதன் மூலம் ஒருமுறை, ரூ.36 லட்சம்அனுப்பபட்டு, அது விவசாயி களுக்கு சென்று சேராமல், அதில் ரூ.32 லட்சம் திரும்ப பெறப்பட்டது.

மீத தொகை எங்கு சென்றது என்றே தெரியவில்லை. மேலும், அரசு நிர்ணயித்த விதிகளின்படி எந்த ஒழுங்குமுறை கூடமும் செயல்படவில்லை. இந்த நிலையில், அந்த விற்பனைக் கூடங்கள் மூலம் ‘இ-நாம்’ திட்டத்தை செயல்படுத்துவது மேலும் சிக்கலை உருவாக்கும்” என்று தெரிவித்தனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்களிடம் கேட்டபோது, “இந்த திட்டத்தின் மூலம் வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்கிறார்கள். வியாபாரிகளுக்குள் சிண்டிகேட் அமைக்க முடியாது.

மொபைல் மூலமே விலையை நிர்ணயிக்கலாம். இத்திட்டத்தை செயல்படுத்தும் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விலை நிர்ணயம் செய்வதில் உதவி செய்ய எங்கள் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு வியாபாரிக்கும் தனித்தனி ஐடி, பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எத்தனை வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அண்மையில் ஒரு கிலோ நெல்ரூ.33 க்கு கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.

இது இத்திட்டத்தின் வெற்றிக்கு வித்தாகும். மாற்றத்தை யாரும் உடனே ஏற்க மாட்டார்கள். ஆனால் காலத்தின் கட்டாயம் இதை ஏற்றுதான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x