Published : 30 Jan 2023 05:17 PM
Last Updated : 30 Jan 2023 05:17 PM

மீண்டெழுந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் (0.3 சதவீதம்) உயரவடைந்து 59,500 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45 புள்ளிகள் (0.3 சதவீதம் ) உயர்வடைந்து 17,648 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வார முதல் நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கி ஏற்ற இறக்கத்துடன் சென்றன. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 43.20 புள்ளிகள் உயர்வடைந்து 59,374.10 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 22.30 புள்ளிகள் உயர்வடைந்து 17,626.65 ஆக இருந்தது.

பட்ஜெட்டுக்கு முந்தைய பதற்றம், வங்கி, நிதி மற்றும் எண்ணெய் பங்குகளின் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி போன்றவை இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரத்தில் கடுமையாக சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் வீழ்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் இடையில் நிலையில்லாமல் பயணித்தது.

வர்த்த நேரத்தின் போது சென்செக்ஸ் 945 என்ற அளவில் 58,699 - 59,644 புள்ளிகளுக்கிடையில் வீழ்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் இடையே பயணித்தது. நிஃப்டி 17,400 - 17,750 இடையே பயணித்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 169.51 புள்ளிகள் உயர்வடைந்து 59,500.41ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.60 புள்ளிகள் உயர்வடைந்து 17648.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. நெல்ட்லே இந்தியா, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல் எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x