Published : 21 Jan 2023 07:40 AM
Last Updated : 21 Jan 2023 07:40 AM
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் ஜனவரி 18 வரையிலான கணக்கீட்டின்படி பயணிகள் மற்றும் சரக்குப் போக்கு வரத்தின் மூலமாக ரயில்வே ரூ.1.9 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரயில்வே ஈட்டிய வருவாய் ரூ.1.3 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. ஆக, நடப்பு நிதியாண்டில் ரயில்வேயின் வருவாய் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரயில்வே மூலமான சரக்கு போக்குவரத்துக்கு அதிக தேவை எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் 2,000 சரக்கு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில் ரயில்வே மூலமாக ரூ.2.3 லட்சம் கோடி வருவாய் ஈட்ட பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 81 சதவீதம் தற்போதே எட்டப்பட்டுவிட்டது. நடப்பு நிதியாண்டில் கணக்கீட்டு கால நிலவரப்படி பயணிகள் மூலம் ரூ.52,000 கோடி வருவாயாக ரயில்வேக்கு கிடைத்துள்ளது. இது, 2018-19-ல் ஈட்டிய ரூ.51,000 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்பதுடன் வரலாற்று உச்சமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT