Published : 30 Dec 2022 06:54 AM
Last Updated : 30 Dec 2022 06:54 AM
சென்னை: இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் பெரிய நாடாக 17-வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியாவின் 9-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா உள்ளது. சரக்கு மற்றும் சேவையை உள்ளடக்கிய இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 27.5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் இறுதியில் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி 500 மில்லியன் டாலரை தாண்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (இசிடிஏ) உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திலிருந்து முதல் முறையாக சரக்குகளை அனுப்பி வைக்கும் விழா அதானி எண்ணூர் கண்டெய்னர் முனையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எப்ஐஇஓ முன்னாள் தலைவர் இஸ்ரார் அஹமது, ஐடிஎஸ்-ன் வெளிநாட்டு வர்த்தக இணை தலைமை இயக்குநர் பிஎன் விஸ்வாஸ், சுங்கத் துறையின் கூடுதல் ஆணையர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT